இந்தியா நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் AVIT, VMRF (DU) கல்வி நிறுவனங்கள்
NEC கார்பரேஷன் இந்தியா மற்றும் இன்டெல்® டெக்னாலஜி இந்தியா நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் AVIT, VMRF (DU) கல்வி நிறுவனங்கள்AI/ML, IOT, சைபர் பாதுகாப்பு, ஸ்மார்ட் மொபிலிட்டி, FPGA தீர்வுகள் மற்றும் உயர்திறன் கம்ப்யூட்டிங் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கற்றலை ஏதுவாக்குவது இதன் குறிக்கோள்இது குறித்து பேசிய NEC கார்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளத்தின் பொது மேலாளர் மற்றும் தலைமை அலுவலர் தீபக் ஜா, இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது குறித்து கூறியதாவது: “இந்த கூட்டு சான்றிதழ் கல்வித்திட்டங்கள், தொழில்துறைக்கு உகந்தவாறு தயார் நிலையிலுள்ள தொழில்முறை பணியாளர்களை உருவாக்கும் கல்விசார் கருத்தாக்கங்கள், மிக நவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றோடு பயிலும் குறிப்பிட்ட கல்விப் பிரிவில் நிபுணத்துவம் ஆகியவற்றை மாணவர்கள் சிறப்பாக கற்றுக்கொள்வார்கள். இந்தியாவுக்கா இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குவது, தொழில்துறை – கல்வி நிறுவனங்களுக்கிடையில் கூட்டாண்மைகள் மற்றும் இளைய தலைமுறையினரின் திறனை உயர்த்துதல் ஆகியவற்றின் மீது சிறப்பு கவனம் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட் 2023 உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் எதிர்கால தொழில்நுட்ப திறனுள்ளவர்களாக மாணவர்களை அதற்கான அறிவை வழங்குவது மற்றும் திறனை பகிர்வதில் எங்களது பொறுப்புறுதியை நாங்கள் இதன் மூலம் வலுப்படுத்தவிருக்கிறோம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழியாக, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் மீது நமது இளைய தலைமுறையினரை சுய – சார்புள்ளவர்களாக ஆக்கமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம் மற்றும் எதிர்பார்க்கிறோம்.”