இன்றைய ராசிபலன்

Loading

மேஷம்

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும்.  தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. முருகப்பெருமானை வழிபட்டு  தொடங்குவதன் மூலம் சிரமங்கள் குறையும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரிஷபம்

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவு கள் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

மிதுனம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் நீங்கும். முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழியில்  எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். துர்கையை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி பெறலாம்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர் பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சகோ தரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடு  செய்யும் வாய்ப்பு ஏற்ப டும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். சிவவழிபாடு காரியங்களை அனுகூலமாக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

சிம்மம்

மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக சற்று அலைச் சலும் சோர்வும் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்களால்  குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது. வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் மனஅமைதி உண்டாகும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாம்

இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அம்பிகையை வழிபட நன்மைகள் கூடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்

உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க் கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். முருகப்பெருமானை  வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்..விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

தனுசு

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருப்பினும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தாய்மாமன்  வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். மகான் ராகவேந்திரரை வழிபட மனஉளைச்சல்கள் நீங்கும்..மூலம் நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்மற்றவர்களுடன்வீண்விவாதங்களில்ஈடுபடவேண்டாம்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகரம்

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சங்கடங் கள் குறையும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

கும்பம்

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீனம்

அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். முருகப்பெருமானை வழிபட மனதில் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி  தரும் செய்தி கிடைக்கும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *