மக்கள் பணத்தை அதானிக்கு அளித்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய பாஜக மோடி அரசு எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து பொது வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை அதானிக்கு அளித்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார்.நகர தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான வி.இ.ஜான் அனைவரையும் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்திற்கு சரஸ்வதி,எம்.சி.பிரபாகரன்,சரஸ் வதி, எஸ்,எஸ்.சரவணன், ஜோதி சுதாகர், கே.ஜி.புருஷோத்தமன்,இ.எல்.ரமேஷ் ,டி.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஏகாட்டூர் ஆனந்தன்,சி.பி.மோகன்தாஸ்,ஜெ.டி. அருள்மொழி,ஜெ.கே.வெங்கடேஷ்,வி. எஸ்.ரகுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
தொடர்ந்து மத்திய பாஜக மோடி அரசு எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து பொது வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை அதானிக்கு அளித்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் நிர்வாகிகள் பொன்ராஜ்,முகுந்தன்,ஜி.புருஷோத் தமன்,உதயசங்கர், பி.ஆர்.பொன் ரங்கன்,பூண்டி ராஜா,குப்பன்,அஜித்,அருண்,கலீல் ராமன், மூர்த்தி,உதய கலந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.