கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணிகள்

Loading

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத்துறை மூலம் ரூ..17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க அரசாணை வாயிலாக நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணையானது 200 மீட்டர் நீளத்திலும், 1.50 மீட்டர் உயரத்திலும் அதிகத்தூர் – ஏகாட்டூர் கிராம எல்லை பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படவுள்ளது. இத்தடுப்பணை அமைவதன் மூலம் அருகில் உள்ள கிராமங்களான அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் மற்றும் கடம்பத்தூர் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்த்துளை கிணறுகள் மூலம் சுமார் 540 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயன்பாடு அதிகரிப்பதோடு, கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாக ஏதுவாக அமையும். இத்தடுப்பணை கட்டப்படுவதற்கான பணிகளை  மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் அடிக்கல் நாட்டி, இனிப்புகள் வழங்கினார்.இதில் கொசஸ்தலையாரு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சி. பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்தியநாராயணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், நீர்வளத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *