விதிமுறைக்கு புறம்பாக தனிநபரால் மீன் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

Loading

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வானகிரி ஊராட்சிக்கு உட்பட்ட காவிரி ஆற்றின் கரையோரம் விதிமுறைக்கு புறம்பாக தனிநபரால் மீன் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் நிலையில் இதிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஆற்றில் கலந்து ஆற்று நீரும் நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கடல் நீர் புகுந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை தவிர்ப்பதற்காக சமீபத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணையும் கட்டப்பட்டு தற்போது தான் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் தன்மையும் மாறி உள்ளது. இந்நிலையில் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தனி நபரால் அமைக்கப்படும் மீன் குளிருட்டும் நிலையத்தை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி தருமகுளம் பகுதியில் கடந்த வாரம் வானகிரி கீழப்பெரும்பள்ளம் மேல பெரும்பள்ளம் உள்ளிட்ட ஏழு கிராம மக்கள் கடையடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்த நிலையில் கிராம சபை கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் குளிரூட்டும் ஆலையை தடை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் காவிரி தனபாலன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சட்டத்திற்கு புறம்பாக நஞ்சை நிலத்தை புஞ்சை நிலமாக மாற்றி கொடுத்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியும் அரசு மானியத்துடன் கட்டப்பட்டு வரும் மீன்குளிரூட்டும் நாளைக்கு எப்படி மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல் துறை ஆய்வு செய்துள்ளதாகவும் அறிக்கையை இன்று வந்துவிடும் என்றும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.   மீன் குளிரூட்டும் ஆலை கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உடனடியாக பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0Shares

Leave a Reply