தனது ஈக்விட்டி பங்குகள் பிரிக்கப்படுவதை அறிவிக்கும் அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

Loading

தனதுஈக்விட்டிபங்குகள்பிரிக்கப்படுவதைஅறிவிக்கும்அப்போலோமைக்ரோசிஸ்டம்ஸ்புதியஎலெக்ட்ரானிக்தொழிலகத்திற்காக தெலங்கானா மாநில அரசிடமிருந்து நில ஒதுக்கீடையும் பெற்றிருக்கிறது31.ஜனவரி 2023: எலெக்ட்ரானிக் வன்பொருள் மற்றும் மென்பொருள் தீர்வுகளை வடிவமைப்பது, உருவாக்குவது, ஒருங்கிணைப்பது மற்றும் அவற்றை சோதிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்பாட்டில் முன்னோடி என புகழ்பெற்றிருக்கும் அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ், தெலங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள TSIIC ஹார்ட்வேர் பார்க் PH-II – ல் நேரடி விற்பனை அடிப்படையில் 10118 சதுர மீட்டர் விஸ்தீரணம் கொண்ட இடைக்கால நில ஒதுக்கீட்டை பெற்றிருக்கிறது. எலெக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழிலகத்தை நிறுவுவதற்காக அரசின் இந்த நில ஒதுக்கீடு இந்நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது. விண்வெளி, பாதுகாப்பு, வான்வெளி, போக்குவரத்து மற்றும் ஹோம் லேண்ட் பாதுகாப்பு சந்தைகளுக்காக மிக நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகளும், தீர்வுகளும் அமைந்திருக்கின்றன. இந்நாட்டின் BSE மற்றும் NSE பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் முற்றிலும் பணம் செலுத்தப்பட்ட ரூ. 10 முகமதிப்பைக் கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கை, முற்றிலும் பணம் செலுத்தப்பட்ட ரூ. 1 முகமதிப்புள்ள 10 ஈக்விட்டி பங்குகளாக பிரிப்பதற்கான வரைவுத் திட்டத்திற்கு இயக்குநர்கள் குழு ஒப்புதலளித்திருக்கிறது. இந்த முடிவு, நிறுவனத்தின் பங்குதாரர்களது ஒப்புதலுக்கு உட்பட்டதாகும். சம பங்குகள் இவ்வாறு பிரிக்கப்படுவதற்கான பதிவு தேதி இயக்குநர்கள் குழுவால் முடிவுசெய்யப்படும். பாதுகாப்பு, வான்வெளி மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அதிக திறன் கொண்ட, செயல்திறன் மற்றும் நேர முக்கியத்துவம் கொண்ட தீர்வுகளை வழங்கும் தயாரிப்புகளின் வடிவமைப்பு உருவாக்கம் மற்றும் விற்பனையில் அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் செயலாற்றிவருகிறது. வான்வெளி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகிய துறைகளுக்கு மிக நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் மேம்பட்ட தீர்வுகளை அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் வழங்கி வருகிறது; அத்துடன், இரயில்வே, ஆட்டோமோட்டிவ் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறையைச் சேர்ந்த சந்தைகளுக்கும் தீர்வுகளை இதன் தயாரிப்புகள் வழங்கி வருகின்றன. இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்தீர்வுகளின் பரந்த அணிவரிசை, தொடக்கத்திலிருந்து இறுதி வரையிலான முழு வடிவமைப்பு, அசெம்ப்ளி மற்றும் பரிசோதிப்புக்கான திறன்கள் இதே துறையில் இயங்கிவரும் பிற நிறுவனங்களைவிட அதிக போட்டித் திறனை இதற்கு வழங்குகிறது.
0Shares

Leave a Reply