திலீப் ஜோடியாக நடிக்கும் பிரணிதா

Loading

தமிழில், ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தனது காதலரான தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அர்னா என்ற பெண் குழந்தை உள்ளது.குழந்தை பிறந்த பின் சினிமாவில் நடிக்காமல் இருந்த பிரணிதா, இப்போது மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடிக்கிறார். திலீப்பின் 148 வது படமான இதை, ரதீஷ் ரகுநந்தன் இயக்குகிறார்.
இதுபற்றி கூறிய பிரணிதா, “முதன் முறையாக குழந்தையை பெங்களூரில் விட்டுவிட்டு கேரளா செல்கிறேன். மகளை விட்டு அதிக நாட்கள் விலகி இருக்க வேண்டும் என்பதால் பதட்டமாக உணர்கிறேன். மலையாளப் படத்தில் நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. மலையாள வசனங்களைக் கற்றுக்கொண்டு பேசுவது சவாலானது. பிறமொழிகளை என்னால் வேகமாகக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், மலையாளம் பேசும் தொனிக்கு அதிகப் பயிற்சி தேவை என நினைக்கிறேன்” என்றார்.

0Shares

Leave a Reply