30ஆம் ஆண்டு தை கிருத்திகை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Loading

வேட்டவலம் சிங்காரவேல் முருகன் கோவிலில் 30ஆம் ஆண்டு தை கிருத்திகை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஜமீன் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிங்காரவேல் முருகன் திருக்கோவிலில் 30-ஆம் ஆண்டு தை கிருத்திகை ரத உற்சவத்தை முன்னிட்டு காலை  விநாயகர் பூஜையுடன் க்ஷோமங்கள் நடந்தது அதை தொடர்ந்து அளவில் சக்திவேல் புறப்பாடு மாட வீதிகளில் வலம் வந்தது மூலவர் மற்றும் உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் சிங்காரவேல் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக காட்சியளித்தார்.   இதில் வேட்டவலம் ஜமீன் மகேந்திர பந்தார் யார் தேர்வடம் பிடித்து இழுத்து  தொடங்கி வைத்தார் அதைதொடர்ந்து மாட வீதிகளில் மேளதாளங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேர் ஊர்வலம் நடைபெற்றது அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது  விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் ஜெயபாலன், விழா குழு தலைவர் கருணாகரன் மற்றும் விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *