25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் :

Loading

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம்  நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோ. கிரிதரன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில துணை தலைவர் விக்டர் பால்ராஜ் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காஞ்சிபுரம் வடசென்னை, கிழக்கு சென்னை, மேற்கு சென்னை, மத்திய சென்னை, செங்கல்பட்டு தென் சென்னை 1 மற்றும் தென் சென்னை 2 ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்த அதே நாளில் வழங்கப்பட வேண்டும், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஈட்டிய விடுப்பு சலுகை மீண்டும் வழங்கப்பட வேண்டும்,திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும்,ஒட்டுமொத்த அரசு அலுவலர் சமுதாயத்தை பலி கொடுக்கும் அரசாணை எண் 115  அரசாணை எண் 52 மற்றும் 139 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாவட்ட நிர்வாகிகள் தேவராஜன், தில்லைகுமரன் முத்து ரமேஷ் , வெங்கடேசன், எம்.தவமணி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *