சிறுத்தைகள் கட்சியின் கார்பெட் சிலம்பு தலைமையில் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமா தொல் திருமாவளவன் 60 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட திருமாவளவன் அறக்கட்டளை சார்பாக 60 பயனாளிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கார்பெட் சிலம்பு தலைமையில் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி பொன்னம்மாப்பேட்டையில் நடைபெற்றது. இம் முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை , இலவசமாக மூக்கு கண்ணாடி வழங்குதல் ரத்த பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக 34வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணை செயலாளர் பாவேந்தன், மாவட்ட துணை செயலாளர் காயத்ரி, மனோ உட்பட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.