நிர்வாக இயக்குநர் டாக்டர். கே. அனந்த் குமாரை பாராட்டி கௌரவித்த பிஎஸ்ஜி சன்ஸ் அண்டு சாரிட்டீஸ்
சென்னை.28.ஜனவரி.2023 – கோயம்புத்தூர் மாநகரில் பிஎஸ்ஜி சன்ஸ் அண்டு சாரிட்டீஸ் அதன் 97-வது நிறுவன தின கொண்டாட்ட நிகழ்வின்போது பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (PSG CAS) பெருமைக்குரிய முன்னாள் மாணவரும் மற்றும் ஆசியாவில் தடுப்பூசிகள் மருந்தின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான இந்தியன் இம்யூனாலஜிக்கல்ஸ் லிமிடெட் (IIL) – ன் நிர்வாக இயக்குனருமான டாக்டர். ஆனந்த் குமார் அவர்களை பாராட்டி கௌரவித்தது. தனது முதுகலை பட்டப்படிப்புத் தேர்வில் தரவரிசையில் முதலிடம் பிடித்தவரான டாக்டர். குமார் இக்கல்லூரியில் விலங்கியலில் பிஎஸ்சி இளங்கலை பட்டப்படிப்பையும் (1983-86) மற்றும் நுண்ணுயிரியலில் எம்எஸ்ஸி முதுகலை பட்டப்படிப்பையும் (1986-1988) படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்ட கௌரவத்தை ஏற்றுக்கொண்டு டாக்டர். கே. ஆனந்த் குமார் உரையாற்றுகையில் கூறியதாவது: “சிறப்பான தொலைநோக்கு கண்ணோட்டத்தை பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்கள் கொண்டிருந்தன. 1980-களில் தொடக்கத்தில் நுண்ணுயிரியல் (மைக்ரோ பயாலஜி) ஒரு அரிதான கல்வித் திட்டமாக இருந்தபோது அதை இங்கு கற்றது எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டமாகும். பிஎஸ்ஜி – ல் நிலவும் கல்விக்கு உகந்த சூழலும் மற்றும் அதன் கற்பித்தல் முறையும், அதன் மாணவர்களது கல்விசார் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமும், உத்வேகமும் அளிப்பதாக இருக்கின்றன. உலகளாவிய பெருநிறுவனங்களில் தலைமைப் பொறுப்பேற்று முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு தலைவராக என்னை உருவாக்கியதில் இக்கல்வி நிறுவனத்தின் பங்கு முக்கியமானது. பெற்ற கல்வி அறிவை போதுமான திறன்களை கொண்டு வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இன்றைய இளம் தலைமுறையினருக்கான எனது ஆலோசனையாக இருக்கிறது. வெற்றிகரமான நபராக முன்னேற்றம் காண, நன்னெறி மற்றும் மதிப்பீடுகளில் ஒருவர் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. என்றார்…