கொடைக்கானலில் நாளுக்கு நாள் கட்டிடங்களின் எண்ணிக்கை பல மடங்குகள் பெருகிக்கொண்டே வருகிறது

Loading

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செய்தி
இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிக்க இந்தியா மட்டுமில்லாமல் அயல்நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருடந்தோறும் கொடைக்கானல் வந்து செல்கின்றனர் இதில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பல நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு இடங்கள் வாங்கி வீடுகள் கட்டவும் குடியிருக்கவும் தொழில் தொடங்கவும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் இதனால் கொடைக்கானலில் நாளுக்கு நாள் கட்டிடங்களின் எண்ணிக்கை பல மடங்குகள் பெருகிக்கொண்டே வருகிறது மேற்படி கட்டிடங்களின் பெருக்கத்தால் கொடைக்கானலில் இயற்கை எழில் பாதிக்காத வண்ணம் கட்டிடம் கட்டுவதற்கு அரசு பிரத்தியோகமான விதிகளை உருவாக்கி உள்ளது அதன்படி கொடைக்கானலில் கட்டிடங்கள் கட்ட வேண்டும் எனில் மாஸ்டர் பிளான் ஆப் கொடைக்கானல் மற்றும் Tamilnadu District Municipalities (Hills Stations) Rule1993 ஆகியவற்றின் விதிமுறைகளை பின்பற்றி அரசிடம் அனுமதி பெறுவது அவசியம் ஆகும். கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியை சுற்றி சுமார் 200 மீட்டர் தூரம் தடை செய்யப்பட்ட பகுதியாகும் மேற்படி தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டிடம் கட்டுவதற்கோ வேறு ஏதேனும் வளர்ச்சி பணிகள் செய்வதற்கோ யாருக்கும் தனிப்பட்ட முறையில் அனுமதி கிடையாது இந்நிலையில் சிலர் அரசு அதிகாரிகளின் உதவியுடன் கொடைக்கானல் ஏரியை சுற்றி உள்ள மேற்படி தடை செய்யப்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக தொடர்ந்து கட்டிடங்கள் கட்டிய வண்ணம் இருக்கின்றனர் மேற்படி சட்ட விரோத செயல்களை அரசியல் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் இது தொடர்பாக பல சமூக ஆர்வலர்கள் கொடைக்கானல் நட்சத்திர ஏரியை மேற்படி சட்ட விரோத செயல்களில் இருந்து பாதுகாக்க இன்றுவரையிலும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இருந்தும் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் மற்றும் சில அரசு அதிகாரிகள் அதனை கண்டு கொள்வதே கிடையாது இந்நிலையில் தற்போது குறிப்பாக மேற்படி விதிகளை மீறி கொடைக்கானல் ஏரியிலிருந்து 30 மீட்டர் தொலைவில் கொடைக்கானல் நகராட்சி தற்காலிக படகு குழாம், பழைய கல்லறை சாலை மற்றும் கிரீன் லேக் வியூ ரிசார்ட் அருகில் சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமான ராட்சச கட்டிடம் ஒன்று தற்போது கட்டப்பட்டு வருகின்றது. கொடைக்கானல் நகராட்சி ஆணையர் அவர்கள் அரசின் விதிகளை பின்பற்றி கொடைக்கானலின் இயற்கை எழிலை காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மதுரை மாவட்ட வழக்கறிஞர் சி.ரமேஷ் பி.ஏ.பி.எல் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியாளர் அவர்கள், நகர் மற்றும் ஊரக அமைப்புக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். இதற்கு உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர் இதற்கு சி.ரமேஷ் வழக்கறிஞர், சம்பந்த பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கொடைக்கானல் ஏரியின் இயற்கை எழிலை பாதுகாக்க மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *