பாலகிருஷ்ணா ஜோடியாகிறார் காஜல் அகர்வால்

Loading

நடிகை காஜல் அகர்வால், 2020-ம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தைப் பிறந்தது.குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்துள்ளனர். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள காஜல் அகர்வால், ஷங்கர் இயக்கத்தில், ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து பாலகிருஷ்ணா ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார்.அனில் ரவிபுடி இயக்கும் இது பாலகிருஷ்ணாவின் 108 வது படம். அவர் நடித்து பொங்கலுக்கு வெளியான ‘வீர சிம்மா ரெட்டி’ வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார்.

0Shares

Leave a Reply