தூத்துக்குடி அரசு விழாவில் அலட்சியம் – வேடிக்கை பார்த்த கலெக்டர்

Loading

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அதிகாரிகள் கூட்டத்தில் பேசும்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிறைகுறைகளை கலெக்டர்கள் என்னிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கும்போது தான் அதற்கு தகுந்தாற்போல் நான் மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்பாக இருக்கும். தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும். உண்மையை சொல்ல வேண்டும் என்று கலெக்டர்கள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் தலைமைச்செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மாவட்டத்தில் உள்ள குறைகளை தீர்க்க வேண்டி தினமும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் தலைமைச்செயலகத்திற்கும் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்கள் வருகின்றன. மாவட்ட மக்களின் குறைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்களே தீர்த்து வைக்க வேண்டும். எல்லா கோரிக்கையும் இங்கு வராத வகையில் பார்;த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், நடைபெறுகின்ற பணிகளையும் நடைபெற வேண்டிய திட்டங்களையும் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தி மாவட்ட வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டிய பொறுப்பு கலெக்டருக்கு உண்டு. கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டிய கலெக்டருக்கு கீழ் உள்ள அதிகாரிகள் பலர் பணிகளில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு முறையான பதில்கள் வருவதில்லை. மக்கள் குறைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை. சில பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் கொடுக்கப்பட்டு, ஏனோதானோவென்று பணி செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பலரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் வழங்காமல், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனுக்கள் அனுப்பி வருகின்றனர். அந்த மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கே அவப்பெயர் ஏற்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறுகின்ற பல அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகாரிகள் வராமல் காலம்தாழ்த்தி அவர்களையும் அலட்சிப்படுத்துகிறார்கள். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தூத்துக்குடியில் விழிப்புணர்வு பேரணி என்ற பெயரில் பள்ளி மாணவ-மாணவிகளை வரவழைத்து விழிப்புணர்வு பாடல் நடனம் நடைபெற்றது. இதில் பள்ளி சிறுவர்களை ஆட விட்டு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி சப்-கலெக்டர் கௌரவ் குமார், தாசில்தார்; செல்வகுமார், ரகு (தேர்தல்) உள்ளிட்ட பலர் வேடிக்கை பார்த்தனர். மலரும் மொட்டுகளான பள்ளி குழந்தைகளை வெட்டவெளியில் ஆட விட்டு வேடிக்கைப் பார்ப்பது தவறான முன்உதாரணமாக அமைந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு விழாவில் மாணவ-மாணவிகள் பங்கு பெற்றால், அவர்களுக்கு நன்மை என்றால் அதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட காலதாமதத்தினால் பல பெண் குழந்தைகள் தங்கள் அவசர தேவையான இயற்கை உபாதையை கழிக்க கூட முடியாத நிலை ஏற்பட்டதை பல சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply