INDIA BOOK OF RECORDS என்ற அமைப்பின் மூலம் சிறந்த அறிவுத்திறன் படைத்த குழந்தைக்கான விருது பெறப்பட்டது.

Loading

நீலகிரிமாவட்டம்,உதகையை அடுத்த நஞ்சநாடு,கப்பத்தொரை பகுதியைச் சேர்ந்த பவித்ராவின் மகன் பி.கிரினித் ,ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வரலாற்றுத்துறையில்  உலகம்  முழுவதுமுள்ள நாடுகளின் சிறப்பம்சங்கள் மற்றும் இந்திய அளவில்  வரலாற்றில் இடம் பிடித்துள்ள அரசர்கள் மற்றும் தலைவர்கள்  குறித்த தகவல்களை துல்லியமாக எடுத்து கூறுவதில் சிறந்து விளங்குவதால் இவருக்கு INDIA BOOK OF RECORDS  என்ற அமைப்பின் மூலம் சிறந்த அறிவுத்திறன் படைத்த குழந்தைக்கான விருது  பெறப்பட்டது.ஏற்கனவே மூன்று விருதுகள்  பன்திறன் விருது(Multi Talented Kid) உலகளாவிய குழந்தை  சாதனையாளர்  விருது,குழந்தை அறிவாளி விருதுகளை பெற்றவர்.இந்த விருதுகளைப் பெற்ற கிரினித் தனது விருதுகளுடன்  நீலகிரி மாவட்ட  ஆட்சித்தலைவர் அம்ரித் இ.ஆ.ப.அவர்களிடம் ஆசி பெற்றார்.அவருடன்  அவருடைய  தாயார் திருமதி.பவித்ரா  மற்றும்,கப்பத்தொரை ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதல்வர் திரு.ரங்கநாதன் உடனிருந்தனர்.கிரினித் மென்மேலும் பல விருதுகளை பெற்று,நாட்டுக்கும்,வீட்டுக்கும் புகழ் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் வாழ்த்தினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *