தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மூன்றாம் காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கை

Loading

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2022-23 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் முடிவடைந்த ஒன்பது மாத கால நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி .எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். தலைமை நிதி அதிகாரி, பொதுமேலாளர்கள், மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். கடன் வழங்கல் துறைவங்கியானது விவசாயம், சிறு குறு தொழில் கடன், வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.2022-23  மூன்றாம் காலாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு (Priority Sector)  வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.23,235 கோடியில் இருந்து ரூ.25,636 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 10.33% ஆகும். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கை விட அதிகமாக 79.67% என்ற விகிதத்தில் கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காலாண்டில் இரண்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது, மேலும் இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 25 புதிய கிளைகளைத் துவங்க திட்டமிட்டுள்ளோம்காப்பீடு திட்டங்களை வணிகப்படுத்த, மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், சோழா எம் எஸ் பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் கோடக் பொது காப்பீட்டு நிறுவனம்   ஆகிய   நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு ஒப்பந்தக்களை நடப்பு நிதியாண்டில் எஞ்சியிருக்கும் காலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *