பேரூராட்சி செயல் அலுவலர் டேவிட்சன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சீல் வைத்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆயிரங்கால் பொழிமுகம் பகுதியில் லெமூர் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் இயற்கை அழகை ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்கின்றனர். இந்த கடற்கரையில் குடும்பத்துடன் பொதுமக்கள் வந்து செல்வதால் இங்கு ஏராளமான கடைகள் செயல்படுகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு பூட்டப்பட்ட நிலையில் இருந்த ஃபுட் கோர்ட் என்னும் உணவகத்தை கணபதிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் டேவிட்சன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சீல் வைத்து உள்ளார். இதுகுறித்து கடையின் உரிமையாளர் சுபின் கூறும்போது தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்ததாக எந்த ஒரு புகாரும் இல்லாத நிலையில் மேலும் பொருட்கள் ,பழவகைகள் குளிர்சாதனங்கள் என லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கடைக்குள் இருக்கும்போது அது அழுகும் நிலையில் உள்ளதாகவும் இதனால் அதற்குரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சமையல் கேஸ் சிலிண்டரும் கடையின் உள் உள்ளநிலையில் ஆபத்தான சூழல் நிலவுவதால் அதிகாரி எந்தவித முன் அரிவிப்பும் தாரமலே பூட்டப்பட்டிருந்த கடையில் பேரூராட்சி அதிகாரி சீல் வைத்து சென்றுள்ளார். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யாமலே பூட்டிஇருந்த கடையை பேரூராட்சி அதிகாரி சீல் வைத்துள்ளார். இந்த கடையை நம்பிதான் தன்னுடைய குடும்ப வாழ்வாதாரம் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து பூட்டிய தன்னுடைய உணவு கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேரூராட்சி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்ட போது குத்தகைக்காரர் அல்லாத நபர்கள் கடை நடத்தி வருவதாகவும் ஆகையால் கடைக்கு சீல் வைத்தேன் என்றும் முன்னுக்கு பின் பதில் கூறினார். அனால் அங்கு நடை பெரும் அனைத்து கடைகளும் தனி நபர் ஒருவர் குத்தகை எடுக்கப்பட்டு தனி தனி ஆகா பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த கடையில் தரம் மற்ற பொருட்கள் விற்பதாகவோ, இந்த கடை சம்பந்தமாக எவ்வித புகார்களோ இல்லாத நிலைமையில் அலுவலரின் இந்த செயல் வேறே ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாமோ அல்லது கடைகளை காலி செய்வதற்கு மேல் மட்டத்தில் இருந்து அவருக்கு ஏதேனும் அழுத்தம் இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படுத்துகிறது…