புதுச்சேரியில் ப்ரீபெய்டு முறையில் மின் கட்டணம்.

Loading

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறு;  ப்பினருமான வைத்திலங்கம் அதிமுகவை பற்றியோ அதிமுகவின் செயல்பாடுகளை பற்றியோ குறைத்து பேச எவ்விதமான தகுதியும் தார்மீக உரிமையும் இல்லை. புதுச்சேரி மாநில அரசியலில் கடைகோடியில் இருந்த வைத்திலிங்கத்தை புதுச்சேரி மாநில முதலமைச்சராக்கியவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள். அந்த நன்றியை மறந்துவிட்டு வழக்கம் போல வைத்தியலிங்கம் அவர்கள் அதிமுகவை குறை கூறுகிறார்.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ரங்கசாமி அவர்கள் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சராக இருந்த போது நரித்தனமான கபட வேடம் பூண்டு காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி முதலமைச்சர் பதவில் இருந்து ரங்கசாமியை இறக்கிவிட்டு குறுக்கு வழியில் மீண்டும் முதலமைச்சரானவர் வைத்திலிங்கம்.இன்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு வைத்திலிங்கம் போன்ற நபர்கள் முதல் காரணம் என்பதை மறந்துவிட்டார். காங்கிரஸ் கட்சியை புதை குழியில் இருந்து தூக்கிவிடும் முயற்சியில் வைத்திலிங்கம் ஈடுபட வேண்டுமே தவிர மக்களுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட்டணியில் இருக்கும் போது தொடர்ந்து குரல் கொடுக்கும் அதிமுகவை பற்றி குறை கூற பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு எந்த அருகதையும் கிடையாது.சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரி காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியாக இருந்தாலும் மக்களி விரோத திட்டங்களை செயல்படுத்தும் சோதனை மாநிலமாக புதுச்சேரியை மத்திய அரசு பயன்படுத்துகிறது. பல விஷயங்களில் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாத திட்டங்களை முதன் முதலில் அமல்படுத்தக்கூடிய மாநிலமாக புதுச்சேரியை தேர்ந்தெடுப்பது மாநில மக்களை அடிமைத்தனமாக நினைக்கும் செயலாகும்.கடந்த ஓராண்டுக்கு முன்பு மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை அமல்படுத்துவதில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் மயமாக்கலுக்கு ஏதுவாக பல செயல்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. தனியார் பயன்படும் விதத்தில் அனுகூலமாக மக்களின் மீது பல்வேறு அடக்குமுறை திட்டங்கள் ஏவப்படுகின்றன. அந்த வகையில் தற்போது மின்கட்டணத்தை வசூல் செய்வதில் ப்ரீபெய்டு என்ற திட்டத்தை மத்திய அரசு கெகாண்டு வந்து அதற்கான ஒப்பந்தம் 2 தினங்களுக்கு முன்பு போடப்பட்டது. புதுச்சேரியில் உள்ள 4.7 லட்சம் மின்விநியோக இணைப்பு ஸ்மார்ட் மீட்டர், எலக்டரானிக் மீட்டர், அனலாக் மீட்டரை 251 கோடி ரூபாய் செலவில் முழுமையாக மாற்றம் செய்து ப்ரீபெய்டு மீட்டராக மாற்றப்பட உள்ளது. மக்கள் மீது திணிக்கும் ஒப்பந்தத்தில் அரசு கையொப்பமிட்டிருப்பது தவறான ஒன்றாகும்.  இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாவார்கள்.மின்விநியோகம் என்பது மக்களின் அத்தியாவசியமான ஒன்று. மக்களுக்கு அரசு பாதுகாப்பாக இல்லை. தினக்கூலி ஊழியர்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்க சிந்திப்பதை விட மின்சாரம் கட்டணம் எவ்வளவு கட்ட வேண்டும் என சிந்திக்கும் சூழலை இது உருவாக்கும். ஒருவேலை மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டால் அவர்கள் ரீசார்ஜ் செய்யும் வரை பல அவதிக்குள்ளாவார்கள்.பல அரசு துறைகள் மின்சார கட்டண பாக்கி வைத்துள்ளனர். இதில் குறிப்பாக பொதுப்பணித்துறையில் 110 கோடியும், உள்ளாட்சி துறையில் 98 கோடியும், கூட்டுறவுத்துறை 65 கோடியும், ஸ்ஸ்பின்கோ 60 கோடியும் மின்சார பாக்கி வைத்துள்ளனர். இதனை வசூல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் நிறுவனம் இந்த திட்டத்தை முதன் முதலில் அரசு துறைகளில் தான் செயல்படுத்த உள்ளனர். வரும் டிசம்பர் மாத்த்திற்குள் 4 லட்சத்து 7 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ள புதுச்சேரியில் முழுமையாக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.முழுக்க முழுக்க மக்களுக்கு விரோதமான திட்டம் இது. இதனால் தான் இமாச்சால பிரதேசத்தில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவுக்கு வாக்களிக்காமல், காங்கிரசை வெற்றி பெற செய்தனர்.எனவே இந்த மக்களை பாதிக்கும் இந்த ப்ரீபெய்டு மின்சார திட்டத்தை முதலமைச்சரும், அரசும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இது புதுச்சேரி அதிமுகவின் கோரிக்கை. இந்த திட்டத்தில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை. இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாய கூட்டத்தை கூட்ட முடிவெடுக்க வேண்டும். இந்த திட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சர் உடனடியாக டெல்லி சென்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.ஏற்கனவே தமிழக மின்துறையில் மத்திய அரசால் சீர்திருத்தம் செய்ய முயன்றபோது மக்கள் நலனை கருத்தில் கொண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் முழுமையாக எதிர்த்தார்.
எனவே புதுச்சேரியில் தொடர்ந்து இந்த திட்டத்தை அரசு செயல்படுத்துமேயானால் அதிமுக தலைமை மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் அனுமதி பெற்று புதுச்சேரியில் அதிமுக போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில  கழக அவைத் தலைவர் அன்பானந்தம்,மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில கழக துணை செயலாளர் நாகமணி, புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *