நடிகை ரச்சிதா ராமை நாடு கடத்த வேண்டும்: போலீஸில் புகார்

Loading

நடிகை ரச்சிதா ராமை நாடு கடத்த வேண்டும்: போலீஸில் புகார்
பிரபல கன்னட நடிகை ரச்சிதா ராம். இவர் தர்ஷன் ஜோடியாக நடித்துள்ள ‘கிராந்தி’ என்ற படம், 26-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “வரும் 26ம் தேதி குடியரசு தினம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த முறை, அதை மறந்துவிட்டு, ‘கிராந்தி’ கொண்டாட்டமாக இருக்க வேண்டும்” என்றார்.
இந்தப் பேச்சு சர்ச்சையானது. இதையடுத்து குடியரசுத் தினத்தை ரச்சிதா அவமதித்ததாகக் கூறி, கர்நாடக மாநில அறிவியல் ஆய்வு கழகத்தைச் சேர்ந்த சிவலிங்கையா என்பவர், மாண்டியாவில் உள்ள மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ரச்சிதா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து நாடு கடத்த வேண்டும் என்றும் கன்னட சினிமாவில் நடிக்க அவருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

0Shares

Leave a Reply