ஒளவையார் மக்கள் சேவை இயக்கம் பெயர் பலகை திறந்து வைத்து நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
![]()
புதுச்சேரி தென்னஞ்சாலை வீதியில் ஒளவையார் மக்கள் சேவை இயக்கம் புதியதாக பெயர் பலகை திறக்கப்பட்டது.
திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் நேரு(எ) குப்புசாமி, சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஆகியோர் பெயர் பலகையை திறந்து வைத்தனர் . திறப்பு விழா நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு போர்வை, புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி உடை, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சமூகப்பணி சித்தானந்தம் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

