பொன்னேரியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

Loading

திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, உலகநாத நாராயணசாமி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி, மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி பேசினார்.
முன்னதாக பொதுமக்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு நடை பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து, துவக்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்ட பெரிய அளவிலான விழிப்புணர்வு இராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும்,  கோலப்போட்டியையும்  ஆட்சியர் பார்வையிட்டார்.பின்னர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி, பாராட்டினார். மேலும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அப்போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து மீண்டெழுந்த ஒரு மாணவரின் அனுபவ பகிர்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த ஊக்கப்படுத்துதல் பேச்சுகளை ஆட்சியர்  வெகுவாக பாராட்டி, அம்மாணவருக்கு கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.இதில் சார் ஆட்சியர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன்,பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி, பொன்னேரி நகர மன்ற தலைவர் கே.பரிமளம் விஸ்வநாதன்,  மீஞ்சூh ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ரவி, கல்லூரி முதல்வர் சேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேராசிரியர்கள். மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *