மதுரை மாநகர் பாஜக சார்பில் தூய்மைப்பணி
மதுரை பாரதிய ஜனதா கட்சி சார்பாக மேலமடை மண்டல் வார்டு 36 மருதுபாண்டியன் நகர் கிராம நிர்வாக அலுவலகத்தில், மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் தலைமையிலும், மேலமடை மண்டல் தலைவர் ராஜாமணி முன்னிலையிலும் தூய்மைப்பணி நடைபெற்றது, நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார் சிறப்பாக செய்திருந்தார், உடன் நிர்வாகிகள் மாவட்ட பொதுச்செயலாளர் வினோத் குமார், மகளிர் அணி மாவட்ட தலைவி ஓம் சக்தி தனலட்சுமி, தல்லாகுளம் மண்டல் சீதா, ஒரே நாடு நிர்வாகி வடமலையான், இளைஞரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவின் அரசு, இளைஞரணி துணைத் தலைவர் காளிஸ் மணிகண்டன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பிச்சைவேல், முருகபாண்டி, செல்வி கிருஷ்ணன், அருண்குமார் மற்றும் மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.