கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் பரிசோதனை முகாம்

Loading

பகண்டை ஊராட்சியில்  மாபெரும்  கண் மருத்துவ பரிசோதனை முகாம் பண்ருட்டி  ஜன, 22- கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஓன்றியம் பகண்டை ஊராட்சி மன்றம் மற்றும்  இன்னர்வீல் சங்கம் &  கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்  அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் பரிசோதனை முகாம் பகண்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாண்டியன், தலைமை தாங்கினார். இன்னர்வீல் சங்க பிரசிடெண்ட் வனிதா பாஸ்கர், அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, முன்னிலை வகித்தனர். கண் நீர் அழுத்தம்  சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஞானவேல், வார்டு உறுப்பினர்கள்  சுபா மணிகண்டன், அம்சவள்ளி மூர்த்தி,  சுமதி மண்ணாங்கட்டி,  அசோக்குமார், ராஜாராமன், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply