ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னாரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளது.‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் கைகோர்த்திருக்கிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கின்றனர்.
இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க உள்ளார். மேலும் கடந்த 17-ம் தேதி தெலுங்கு நடிகர் சுனில் ‘ஜெயிலர்’படத்தில் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது நடிகை தமன்னா படத்தில் நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே மலையாளம், தெலுங்கு, கன்னட நடிகர்களை உள்ளடக்கி பான் இந்தியா படமாக ‘ஜெயிலர்’ உருவாவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இனி ‘ஜெயிலர்’ படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என கூறப்படுகிறது.