பாலக்கோட்டில் பஸ்நிலையம் முன்பு திமுக கொடியேற்று விழா
பாலக்கோட்டில் பஸ்நிலையம் முன்பு திமுக கொடியேற்று விழாதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு திமுக கொடியேற்று விழா பேரூர் நகர கழக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு புதியதாக அமைக்கப்பட்ட கட்சி கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.அப்போது பேசிய அவர்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று இந்தியா நாடே அவருடைய தலைமையில் இயங்க போகிறது என தொண்டர்கள் மத்தியில் சூளுரைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், பொருளாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரிமணிவண்ணன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், அன்பழகன், கோபால், பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ.வெங்கடாசலம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, பேரூராட்சி தலைவர்கள் வெங்கடேசன், மனோகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துசாமி, அழகுசிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன், மருத்துவ அணி துணை அமைப்பாளர் காந்தி, மற்றும் கட்சி தொண்டர்களும்.பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.