கொடை விழா தை முதல் செவ்வாய் அன்று வெகு விமரிசையாக தொடங்கியது.
திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் தை மாதம் தொடங்கினாலே கிராமத்து தெய்வங்களின் கோவில் திருவிழாக்கள் கலைகட்ட தொடங்கி விடும்.பாரம்பரிய முறைப்படி கிராமத்து தெய்வங்களுக்கு விழா எடுத்து உற்சாகமாக கொண்டாடுவர். இந்த ஆண்டின் தை மாத திருவிழாவின் தொடக்கமாக தென்காசி அருகே உள்ள வடகரை அருள் தரும் அம்பிகை ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடை விழா தை முதல் செவ்வாய் அன்று வெகு விமரிசையாக தொடங்கியது. செவ்வாய் அன்று மதியம் முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் அனுமா நதியிலிருந்து தீர்த்தகரகத்தை கோவில் அர்ச்சகர் சொ.முப்புடாதி பிள்ளை சுமந்து வர தை முதல் செவ்வாய் மண்டகப்படிதாரர்களான சைவ வேளாளர் சமுதாயத்தினர் திருவீதிளில் அழைத்து வந்தனர். இரவு 8 மணியளவில் தீர்த்தக்கரகம் கோவிலை வந்தடைந்தது. இரவு 11 மணியளவில் முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீர்த்தக்கரக அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முப்புடாதி அம்மனுக்கு தீப ஆராதனைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவினை வடகரை சைவ வேளாளர் சமுதாய நிர்வாகிகளான சே.பொன்னையா பிள்ளை
செ. நமச்சிவாயம் பிளள்ளை சு.திருமலைக்குமார் ஆகியோர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திரளான சைவ வேளாளர் சமுதாயத்தினரும் பொதுமக்களும் திருவிழாவில் கலந்து கொண்டு முப்புடாதி அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அச்சன்புதூர் காவல் நிலைய காவல்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.