22வருடங்களாக பொதுசெயலாளராக வெற்றியை நிலைநாட்டி சமுதாய சேவை புரிந்தமைக்கு பாராட்டு விழா

Loading

சென்னை நாடார் மஹாஜன மகளிர் சங்கம் சார்பில் நாடார் மஹாஜன சங்க பொதுசெயலாளர் கரிக்கோல்ராஜ் அண்ணாச்சிக்கு பாராட்டு விழா.சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமணமாளிகையில் சென்னை நாடார் மஹாஜன மகளிர் சங்க தலைவி வசந்தமாலா பிரபாகரன் தலைமையில் நாடார் மஹாஜன சங்க பொதுசெயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் அண்ணாச்சிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பாராட்டு விழாவில் சங்க பொருளாளர் வனஜா சூரிய பிரகாஷ் வரவேற்புரையாற்றியும் சங்க செயலாளர் ஆனந்தசெல்வி செல்வகுமார் முன்னிலைவகித்தும் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.நாடார் மஹாஜன சங்க பொதுசெயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் அண்ணாச்சி 7முறை தேர்தல் களம் கண்டு 22வருடங்களாக நாடார் மஹாஜன சங்க பொதுசெயலாளராக வெற்றியை நிலைநாட்டி சமுதாய சேவை புரிந்தமைக்கு  பாராட்டு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.தேர்தல் போட்டியில் சென்னையில் வெற்றி பெற்ற 14ங்கு வெற்றியாளர்களையும் மேடையில் பாராட்டி கெளரவிக்கபட்டது.இந்நிகழ்வில் சிறப்புஅழைப்பாளராக எம்.என்.ராஜா,ராகம் செளந்தரபாண்டியன்,கரு சின்னத்துரை நாடார்,எம்.பி.என்.எழில் அரசு,கே.சி.எஸ்.கே.அசோகன்,எம்.எஸ்.எஸ்.சந்திரமோன்,யூ.பிரகாஷ்,துரைப்பழம் மற்றும் சென்னை நாடார் மஹாஜன மகளிர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.நிகழ்வில் பரத நாட்டிய பள்ளி மாணவிகள் பரத நாட்டி கலைநிகழ்சிகளை மேடையில் நிகழ்த்தி காட்டினர்.நிகழ்சியில் சங்க இணைசெயலாளர் மஞ்சுளா ராமன் நிகழ்சியின் நிறைவாக நன்றியுரை வழங்கியபின் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கபட்டது.
0Shares

Leave a Reply