உழவர்களின் பாரம்பரிய நவதான்ய தைப்பொங்கல் திருவிழா நடைபெற்றது.
ஆற்காட்டில் இந்து புரட்சி முன்னணி மற்றும் தமிழ்நாடு இந்து புரட்சி முன்னணி மகளிர் அணி சார்பாக உழவர்களின் பாரம்பரிய நவதான்ய தைப்பொங்கல் திருவிழா நடைபெற்றது. இனிப்பு பொங்கலிட்டு கரும்பு மஞ்சள் வைத்து சூரிய பகவானுக்கு பூஜை செய்து அனைவருக்கும் இனிப்பு பொங்கல், கரும்பு வழங்கி மகிழ்ச்சியுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் வளசரப்பிரியா கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து இந்து பாரம்பரிய பொங்கல் விழா பற்றியும் பெண்கள் மற்றும் அனைவரும் எந்நேரமும் தைரியமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனவும் மற்றும் அமைப்பு உறுப்பினர்கள் மாவட்ட பொருப்பார்களுக்கு ஒத்துழைப்பு தந்து செயலாற்றுங்கள் என சிறப்புரையாற்றி பொங்கல் விழாவை சிறப்பித்தார். உடன் மாவட்ட தலைவர் இளங்கோ, மாவட்ட செயலாளர் கார்த்திக், தொகுதி தலைவர் பாபு, நகர தலைவர் ஜானகிராமன் மற்றும் பொறுப்பாளர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இனிப்பு பொங்கல், கரும்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.