சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் கீதாஜீவன் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் கீதாஜீவன் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்
தூத்துக்குடி. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விமர்சையாக கொண்டாடும் திருவிழாவாக பொங்கல் திருநாள் இருந்து வருகிறது. தைப் பிறந்தாள் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு வரும் தை திருநாளை வரவேற்று விவசாயிகள் மட்டுமின்றி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில்; புது பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபடுவது வழக்கம். அனைவருக்கும் எல்லா செல்வங்களும் கிடைக்கப் பெற்று ஆரோக்கியமான வாழ்க்கையோடு, தொழில் வளம் பெருகி, வருடம் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் செழிப்படைந்து, நாடு வளம் பெற பொங்கல் தினத்தன்று வேண்டிக் கொள்வர். திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு ஆண்டும், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை விமர்சையாக தமிழகம் மட்டுமின்றி கட்சியின் அமைப்பு உள்ள அயல்நாடு உட்பட பல இடங்களில் கொண்டாடி வருகின்றனர். திமுக ஆட்சி வந்த பிறகு பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பல்வேறு பகுதிகளில் சென்னை சங்கமம் என்ற பெயரில் பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலைஞர்களை கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி நினைவு பரிசு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.