மாவட்ட ஆட்சியரிடம் ராணுவ வீரர் மன வேதனையுடன் புகார் மனு.
இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் ராணுவ வீரரின் வீட்டின் எல்லைகளை பாதுகாக்க முடியவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் ராணுவ வீரர் மன வேதனையுடன் புகார் மனு…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சார்பதிவாளருக்கு லஞ்சம் கொடுத்து போலி ஆவணங்கள் மூலம் ராணுவ வீரரின் வீட்டுக்கு செல்லக்கூடிய சாலையை மனையாக பத்திரப்பதிவு செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு…திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், இவர் இந்திய ராணுவ பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்ரீ மூகாம்பிகை நகர் மணப்பிரிவில் சர்வே எண் 42/1A3 மற்றும் 40/21 என இரண்டு வீட்டு மனைகள் வாங்கி அதில் வீடு கட்டி குடியேறி உள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளராக உள்ள முருகன் என்பவர் ராணுவ வீரர் முருகன் வீட்டின் முன்பு செல்லும் 20 அடி சாலையை ஆக்கிரமித்து கலசப்பாக்கம் சார்பதிவாளர் திருமதி.திரிபுரசுந்தரி என்பவருக்கு லஞ்சம் கொடுத்து போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்து அந்த இடத்தில் கொட்டகை அமைத்து ராணுவ வீரர் முருகன் அவரது வீட்டிற்கு செல்ல முடியாத அளவிற்கு சாலையை போலி ஆவணம் தயாரித்து பத்திர பதிவு செய்து அராஜக செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்திய ராணுவத்தில் உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர் முருகன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அவர்களிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வசித்து வரும் மனோகர் என்பவர் ஸ்ரீ மூகாம்பிகை நகர் மனை பிரிவினை கடந்த 2009 ஆம் ஆண்டு உருவாக்கி அதில் 150 மனை பிரிவுகள் அமைத்து விற்பனை செய்து வந்துள்ளார், அதில் 62 ஏ சர்வே எண் 42/1A3 நம்பரில் மன எண் 169 – 170 கிரயம் பெற்று இந்த இரண்டு மனைக்கும் செல்லக்கூடிய 20 அடி அகலம் கொண்ட தெருவை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் முருகன் என்பவர் அவரது அண்ணன் மாணிக்கவேல் என்பவர் பெயருக்கு போலி ஆவணம் தயாரித்து சார்பதிவாளர் திரிபுரசுந்தரியின் மூலம் இரண்டு மணைக்கு செல்லக்கூடிய தெருவை வீட்டு மனையாக மாற்றி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் ராணுவ வீரர் முருகன் வீட்டிலிருந்து வெளியே செல்ல தெரு இல்லாமல் போலி ஆவணம் தயாரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முருகன் என்பவர் ஆக்கிரமித்து வழி விடாமல் அராஜக செயலியில் ஈடுபட்டு வருவதாகவும், பலமுறை இரவு நேரங்களில் ராணுவ வீரரின் மனைவிக்கு முருகன் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது, முன்னதாக ராணுவ வீரர் முருகன் கலசப்பாக்கம் சார்பதிவாளர் திரிபுரசுந்தரியை அணுகி தவறான முறையில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளீர்கள் என மனு கொடுத்தும் மனுவை விசாரிக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் எனது வீட்டுக்கு செல்லக்கூடிய 20 அடி சாலையை மீட்டுத் தரக்கோரி மனு அளித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் முருகன் என்பவர் ராணுவ வீரரின் இடத்தை சர்வாதிகாரி போல் செயல்பட்டு 20 அடி சாலையை அபகரித்து சார்பதிவாளருக்கு லஞ்சம் கொடுத்து போலி ஆவணங்கள் தயாரித்து தனது மனை பிரிவிற்கு சாலை ரோடு ஆகியவற்றையும் அபகரித்து அட்டூழியம் செய்து வருகிறார்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அவர்களிடம் புகார் மனுவினை இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் முருகன் வழங்கினார்.இந்திய ராணுவத்தில் இந்திய நாட்டை பாதுகாப்பதற்காக நாட்டின் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர் முருகன் எல்லையில் பணியாற்றி வரும் நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அவரது மகன் மற்றும் மனைவிக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் முருகன் செய்து வரும் நில அபகரித்து மற்றும் அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.