திடிரென்று தீ விபத்தில் மினி லாரி எரிந்தது. இதில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பெணாயில், துணிப்பவுடர் இறக்கிவிட்டு சென்றபோது திடிரென்று தீ விபத்தில் மினி லாரி எரிந்தது. இதில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினாரஉளுந்தூர்பேட்டை. ஜன 11,பாண்டிச்சேரி இருந்து கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் பெணாயில் மற்றும் துணிப்பவுடர் இறக்கிவிட்டு பாண்டிச்சேரிக்கு சென்றபோது சேலம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை – விருத்தாசலம் மேம்பாலம் புறவழி பிரிவு சாலை அருகே நேற்று இரவு சுமார் 11.15 மணிக்கு மினி டெம்போ வந்துகொண்டிருந்தது.
அப்போது மினி டெம்போ வாகனத்தில் இருந்து முதலில் லேசாக புகை வந்தவுடன் மினி டெம்போ ஓட்டுநர் உடனே சைடு இண்டிக்கெட்டர் லைட் போட்டு ஓரமாக நிருத்தியவுடன் வானம் திடீரென்று தீ பிடித்து லாரி எரிந்தபோது டெம்போ ஓட்டுநருக்கு தன்னந்தனியாக வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்ததால் என்ன செய்வதென்றுதெரியாமல்திகைத்துநின்றுஅல்லாஅல்லாஎன்றபயத்தில்கத்தினார்.அப்போதுதேசியநெடுஞ்சாலையின் வழியாக சென்ற வாகனங்கள் செல்லமுடியாமல் நின்றது.நின்ற வாகனங்களின் ஓட்டிகள் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டியிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அப்போது சுமார் 30 நிமிடத்திற்கு மேல் 2 கிலோமீட்டர் தூரம் வரை சேலம் டு சென்னை மார்க்கமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் உளுந்தூர்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் பிரபாவதி, தனிப்பிரிவு போலீசார் சரவணன் உள்ளிட்ட இரவு ரோந்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் போக்குவரத்து சரி செய்தனர்.இந்த தீ விபத்தில் டெம்போ ஓட்டுநரான பாண்டிச்சேரி மாநிலம் சுல்தான்பேட்டை, ரசூல்தீன் மகன் உபைதூர் ரகுமான் (39) அதிஷ்டவசமாக சிறு காயம் இன்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.