வேலூர் மாவட்டம் வேலூர் மாநகரில் விழுப்புரம் நகரை சேர்ந்த ஸ்ரீ மகாலட்சுமி குரூப்ஸ் நிறுவனத்தில் கலர்ஸ் புதிய கிளை திறப்பு விழா புதிய பேருந்து நிலையம் எதிரே நேற்று காலை 7. 51 மணிக்கு ஸ்ரீ லட்சுமி சரஸ்வதி பூஜை உடன் நடைபெற்றது. இந்த புதிய கலர்ஸ் பட்டு, மில்ஜவுளி, ரெடிமேட்ஸ் மற்றும் பல்பொருள் அங்காடி கடை திறப்பு விழாவிற்குசிறப்புவிருந்தினர்களாக நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கலந்து கொண்டார். உடன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் , வேலூர் மாநகர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கழக நிர்வாகிகள் கழக தோழர்கள்கலந்துகொண்டனர். கிரீம்ஸ் என்ற பெயரில்அமைந்துள்ள தரைத்தளத்தில் மல்லிகை பர்சனல் கேர் ஸ்டேஷனரி டாய்ஸ் எவர்சில்வர் கிப்ட் காஸ்மடிக் பேஷன் ஜுவல் லரி விளையாட்டு சாதனங்கள் மற்றும் கண்ணாடி வீட்டு உபயோகப் பொருட்கள்விற்பனைசெய்யப்படுகிறது. இரண்டாம்மூன்றாம்தளங்களில் கலர்ஸ்என்றபெயரில்திருமணப்பட்டு மில் ஜவுளி ரெடிமேட்ஸ் துணிகள் விற்பனை செய்யப்பட உள்ளது. மூன்றாம் தளத்தில் ஆடவர் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள் உள்ளது . இந்த கலர்ஸ் புதிய கடை திறப்பு விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.