ஈக்விடாஸ் ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையம் ஐ வெளியிட்டது.

Loading

ஈக்விடாஸ் ஸ்மால்  பைனான்ஸ் பேங்க்,  சென்னையில்,  ஈக்விடாஸ்  ஆயிரம் விளக்கு மெட்ரோ  இரயில் நிலையம்
ஐ வெளியிட்டது.பத்மஸ்ரீ அருணாசாய்ராம், கலைமாமணி அனில் ஸ்ரீனிவாஸ் மற்றும் கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் ஈக்விடாஸ் ஆயிரம் விளக்கு மெட்ரோவின் இணை முத்திரை வெளியிட்டனர்
இணை முத்திரையின் அறிமுகம் குறித்து பரவசமடைந்த ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் மூத்த தலைவரும், நாட்டு   தலைவருமான முரளி வைத்தியநாதன், ” ஈக்விடாஸ், நகரின் அதிவேக மற்றும் புத்திசாலித்தனமான பயணத்துடன் கைகோர்த்துச் செல்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சென்னையில் உள்ள சுறுசுறுப்பான  மெட்ரோ இணைப்புகளைப் போலவே அனைவருக்கும் விரைவான மற்றும் சுறுசுறுப்பான  வங்கி அனுபவத்தை ஈக்விடாஸ் வழங்குகிறது. சமூகங்களின் வழியாக நாங்கள்  கடந்து  செல்லும்போது, போக்குவரத்தைப் போல வங்கிச் சேவை தேவையற்றவை அல்ல  என்பதை நாங்கள்  உணர்கிறோம். இந்த அதிநவீன தொழில்நுட்பப் பயணத்தில்  சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) உடன் கூட்டு சேருவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். என்றார்
0Shares

Leave a Reply