இல்லம்_தேடி கல்வி திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா
கன்னியாகுமரி மாவட்டம் :- தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இல்லம்_தேடி கல்வி திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா பூதப்பாண்டி சர் சிபி அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர். ஆலிவர் தாஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்விற்கு இல்லம் தேடிக்கல்வி தோவாளை வட்டார பொறுப்பாளர் தாயாளன் அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.பூதப்பாண்டி பேரூராட்சி துணை தலைவர் அனில்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்புரையாற்றினார்.சமூக ஆர்வலர்கள் எஸ்.நாராயணசாமி மாற்றும் வெங்கடேஷ் வாழ்த்துரை வழங்கி சிறப்பிதார்கள் . குழந்தைகளின் கலைநிகழ்சிகளும், பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வு பாடல்களும் மேடையில் நடைபெற்றது .நிறைவில் இல்லம் தேடிக்கல்விஆசிரியை L.இந்திரா வீரபாகு நன்றியுரையாற்றினார்கள். இல்லம் தேடிக்கல்வி முதலாம் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.