25 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ

Loading

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில், உள்நாட்டு பங்கு மீனவர் மகளிர் குழுவினர், மீன் குத்தகை எடுத்து மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு 8 லட்சத்து, 60 ஆயிரத்து, 740 ரூபாய் பணம் செலுத்தியுள்ளனர். மேலும், அணை பகுதியில் 15 லட்சம் செலவில், 10 லட்சம் மீன்குஞ்சுகளை வாங்கிவிட்டுள்ளனர்.  கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், 2022 வரையிலான மீன்பிடி காலத்தின் இடையில்,  கொரோனா ஊரடங்கு காரணமாக மீன்பிடி தொழிலில் நட்டம் ஏற்பட்டதாகவும், அதனால் தங்களுக்கு மீன்பிடிக்க கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், மகளிர் குழுவினர் நீதிமன்றத்தை நாட, நீதிமன்றம், மகளிர் குழுவினருக்கு 2022 முதல், 2023 வரையில் இரண்டு ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் பேரில் மகளிர் குழுவினர், தற்போது அணையில் மீன்பிடித்து வருகிகின்றனர்.  இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி கல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம் என்பவர், உங்களது மீன்பிடி காலம் முடிந்து விட்டது எனவும், தொடர்ந்து மீன்பிடிக்க வேண்டுமானால்,  ரூ.25 லட்சம் தரவேண்டும் எனவும்,  ஆளும் கட்சியை சேர்ந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் பெயரை சொல்லி, மிரட்டுகின்றனர். பணம் தராவிட்டால், கொலை செய்து விடுவோம் என 20 க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம், ஜன.9 ஆம் தேதி  புகார் மனு அளித்துள்ளனர். மேலும் தங்களது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நீதிமன்றம் மற்றும் அரசின் ஆணைகளை செயல்படுத்தும் விதமாக தாங்கள் மீன்பிடி தொழிலை செய்ய அனுமதிக்க வேண்டும், மீன்பிடி தொழிலை தடுத்து கொலைமிரட்டல் விடுக்கும் ஆளும் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *