பொங்கல் பரிசு தொகை மற்றும் ரொக்க பணத்தை இன்றுமுதல் பெற்றுக் கொள்ளலாம ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 6,20,095 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு  முகாம்களில் வசிக்கும் 927 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1,000  ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் நியாய விலை கடைகளின் மூலமாக 09.01.2023 இன்று முதல் தொடங்கி 12.01.2023 தேதிக்குள் வழங்கப்படும்.கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒரு நாளைக்கு சுமார் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க தொகை வழங்கப்படும். அதன் விவரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் ஒட்டி  விளம்பரப்படுத்தப்படும்.பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணத்தை விற்பனை முனைய இயந்திரத்தின் மூலம் கைரேகை சரிபார்ப்பு முறைப்படி வழங்கப்படும். அங்கீகார சான்று வழங்கியதன் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பொருட்கள் பெறும் அட்டைதாரர்களுக்கு பதிவேட்டில் உரிய நபர்கள் ஒப்பம் பெற்று பொங்கல் பரிசு வழங்கப்படும்.பொங்கல் பரிசுத் தொகுப்பு சம்மந்தப்பட்ட தகவல், புகார் ஏதேனும் இருப்பின் திருவள்ளூர்  9445000177,திருத்தணி 9445000182,பள்ளிப்பட்டு 9445000183,பொன்னேரி 9445000178,கும்மிடிப்பூண்டி 9445000179,ஊத்துக்கோட்டை 8098479640,பூந்தமல்லி 9445000181,ஆவடி 9894939884, இரா.கி.பேட்டை 9786862419,  மாவட்ட கட்டுப்பாட்டு அறை 044 – 27662400 என்ற  வட்டம் வட்ட வழங்கல் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *