கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சேலம் மாவட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சேலம் மாவட்டம் நாட்டாமை கழக கட்டிடம் முன்பு கட்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சேலம் மாவட்டம் நாட்டாமை கழக கட்டிடம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலத்தில் நடைபெற்றது. பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் முடக்கப்பட்ட அகவிலைப்படி, முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணி புரியும் ஆசிரியர்கள் சத்துணவு அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், மாண்புமிகு முதல்வர் பங்கேற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர் அரசு ஊழியர் அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு வாரி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோசமிட்டனர்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பெரியசாமி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி மாயகிருஷ்ணன், தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகி கோவிந்தன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் சந்திரசேகரன், மாநில மகளிர் அணி செயலாளர் சண்முகவடிவு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் திருவேரங்கன், மாவட்ட பொருளாளர் செல்வம் உள்ளிட்டு 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.