வேலூரில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் .
வேலூர் மாநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட ஜாக்டோ – ஜியோ மாவட்ட உயர்மட்ட குழு மற்றும் மாநில முடிவின்படி நேற்று மலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் கவன ஈரப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ட்டி.டி.ஜோஷி, தலைமை தாங்கினார்.மாவட்டஒருங்கிணைப்பா ளர்கள்ஆ.சீனிவாசன்,எம்.எஸ்.செல் வகுமார், டி.சரஸ்வதி ஆகியோர்முன்னிலைவகித்துபேசினர். மாவட்டஉயர்மட்டக்குழுஉறுப்பினர் ஜி.டி.பாபுவரவேற்றுபேசினார்.மா நிலஉயர்மட்டக்குழுஉறுப்பினர்கள் தொழிற்கல்விஆசிரியர்கழகமாநிலத் தலைவர்செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அ.சேகர், தமிழ்நாடு உருது வழிஆசிரியர்சங்கமாநிலபொதுச்செ யலாளர் முகமது ஷாநவாஸ் தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமைபாதுகாப்புசங்கமாநிலபொதுச் செயலாளர்துரைகருணாநிதிஆகியோர்கோ ரிக்கைகள் குறித்து பேசினர் முடிவில் மாவட்ட உயர் மட்ட குழு உறுப்பினர் அஜீத் குமார் நன்றி கூறினார்.