விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளி மற்றும் நானோ யூரியா குறித்து செயல்விளக்கம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பி.செட்டிஅள்ளி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளி இனத்தின் கீழ் நெற் பயிரில் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு தொழில்நுட்பம் மற்றும் நானோ யூரியா குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் வழங்கப்பட்டது. இதில் அருள்மணி வேளாண்மை உதவி இயக்குநர் கலந்து கொண்டு நெற் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் நெற்பயிரில் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு பண்ணைப் பள்ளி என்பது ஒரு பருவகால பயிற்சி இது பருவ காலமாக இருப்பதால் பயிரின் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும் அவற்றுடன் தொடர்புடைய மேலாண்மை நடைமுறைகளையும் உள்ளடக்கியது. பண்ணைப் பள்ளியில் வரிசை நடவு முறை, வரப்பு பயிராக காராமணி, உளுந்து, சாமந்திப் பூ ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யலாம். மேலும் பூச்சிகளை கண்டறிதல் மற்றும் இயற்கை எதிரிகளை அடையாளம் காணுதல், நீர் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகிய தொழில்நுட்பங்களை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் அளிக்கப்படும் இடுப்பொருட்கள் குறித்து கூறினார். மேலும் IFFCO கள அதிகாரிகள் ஷேக் அப்துல்லா மற்றும் அருண்குமார் அவர்கள் IFFCO நானோ யூரியா இலை வழி தெளிப்பு தக்காளி தாவரத்தில் செயல் விளக்கம் செய்யதுகாட்டினர். நானோ யூரியாவானது இலை வழியே ஊடுருவி பயிருக்கு தேவையான தழை சத்தினை சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி பயிருக்கு அளிக்கின்றது. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வீதம் ஒரு ஏக்கருக்கு 500 மில்லி அளவு போதுமான நானோ யூரியாவானது தக்காளி தாவரம் நடவு செய்து 25 நாட்களில் முதல் தவணையாகவும் 15 நாட்களில் இரண்டாம் தவணையாகவும் தெளிக்க வேண்டும் என்றும் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம் ஆகிய உயிர் உரங்கள் கொண்டு நெல் நாற்றை மாற்று நடவு செய்யும்பொழுது நாற்றை 1 ஏக்கர் நாற்றுக்கு 1 கிலோ வீதம் நீரில் கலந்து வேர் நனைத்து மாற்று நடவு செய்ய வேண்டும். உயிர் உரத்தினை ஒரு ஏக்கருக்கு 400 கிராம் வீதம் தெளிக்கலாம் என்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அட்மா திட்ட உதவி மேலாளர்கள் தமிழ்செல்வி உழவன் செயலி பயன்பாட்டை குறித்து விளக்கமளித்தார் மற்றும் கிருஷ்ண மூர்த்தி அவர்கள் உயிர் உரம் பயன்படுத்தல் பற்றி செயல்விளக்கம் செய்து காட்டினார்.வேளாண்மை உதவி அலுவலர் மாரிமுத்து, உதவி பேராசிரியர், தெய்வணி மற்றும் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.