2 பேர் கைது.8.5 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்.

Loading

வாணியம்பாடியில் 35 கிலோ வெள்ளி நகைகள் திருடிய கடையின் விற்பனை மேலாளர் ரியாஸ் பாஷா மற்றும் 1 பெண் ஆகிய 2 பேர் கைது.8.5 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல். வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பூக்கடை பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் L.S.K. ரமேஷ். இவருக்கு சொந்தமான மற்றொரு நகைக் நகைக்கடை C.L.சாலையில் உள்ளது. அந்த கடையை அவரது மகன் L.R.விஜய் ராவ் கவனித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு வாணியம்பாடி நியூடில்லி பகுதியை சேர்ந்த ரியாஸ் பாஷா(28) என்பவர் பூக்கடை பஜார் பகுதியில் உள்ள கடையில் பணிக்கு சேர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் அங்கே வேலை செய்த பின்னர் சி.எல்.சாலையில் உள்ள கடையில் வெள்ளி நகை விற்பனை மேலாளராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் சி.எல் சாலையில் உள்ள நகைக்கடையில் கணக்கு சரி பார்த்தபோது வெள்ளி நகைகள் கணக்கில் குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சிசி டிவி பதிவு காட்சிகள் பார்த்த போது வெள்ளி நகை விற்பனை மேலாளர் ரியாஸ் பாஷா என்பவர் அவப் போது வெள்ளி நகைகளை திருடி செல்வது காட்சிகள் பதிவாகி இருந்தது.  தொடர்ந்து வெள்ளி நகை இருப்பு கணக்கு சரி பார்த்தபோது சுமார் 35 கிலோ வெள்ளி நகைகள் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய ராவ் நகர காவல் நிலையத்தில் ரியாஸ் பாஷா மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரியாஸ் பாஷாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கடந்த ஓராண்டாக கடையில் இருந்து வெள்ளி நகைகளை அவப் போது  திருடி சென்று பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் விற்றதாகவும், அதே பகுதியை சேர்ந்த ஷபீனா (29) என்ற பெண் உதவியுடன் நகைகளை அடமானம் மற்றும் விற்றதாகவும், நகைகள் விற்ற பணத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு உதவி மற்றும் கடன் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். போலீசார் ரியாஸ் பாஷாவை நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தகவல் நியூடில்லி பகுதியில் காட்டு தீ போல் பரவியது.இதனை தொடர்ந்து அவரிடம் குறைந்த விலையில் நகைகள் வாங்கிய பெண்கள் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் நகைகள் ஒப்படைத்தனர். மேலும் அடமானம் வைத்திருந்த நகைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து நகை திருட்டு வழக்கில் ரியாஸ் பாஷா மற்றும் நகைகள் அடமானம் மற்றும் விற்ற உதவிய பெண் ஷபினா(29) ஆகியோரை கைது செய்தும், அவர்களிடம் இருந்து 8.5 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்த பின்னர் அவர்களை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் ரியாஸ் பாஷா நிச்சயதார்த்தம்  நடைபெற்று அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மாப்பிளை நகை திருட்டு வழக்கில் சிறைக்கு சென்ற சம்பவம் பகுதிமக்களிடைய பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0Shares

Leave a Reply