குடிதண்ணீருக்கு கண்ணீர் விடும் கூத்தாங்கல் பட்டி கிராம மக்கள் நடவடிக்கை எடுக்குமா?மாவட்ட நிர்வாகம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் கூவக்காபட்டி கிராமம் கூத்தாங்கல் பட்டியில் சுமார் 400க்கும் மேற்பட்ட பட்டியலினமக்கள் வசிக்கும் பகுதியென தெரியவருகிறது அதுமட்டுமின்றி பல்வேறு மாற்று சமூகத்தைச் சார்ந்தவர்களும் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது இங்கு வசிக்கும் அனைத்து ஊர் பொதுமக்களுக்கும் குடிதண்ணீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயங்கி வந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர் கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சாலையோரம் இருந்ததால் சாலையில் வந்த தனியார் பேருந்து ஒன்று கோர விபத்துக்குள்ளாகி அந்த மேல்நிலைநீர் தேக்கத் தொட்டி இடிந்து சரிந்ததாக கூறுப்படுகிறது அன்று தொடங்கி இன்று வரையிலும் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனபலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் தற்போது தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நீர் ஆதாரம் என்பது போதும் என்ற அளவிலே இருக்கும் சூழலில் இந்தப் பகுதி கிராமமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் போனதால் மனவேதனை அளிப்பதாக ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்ற்றி வருகின்றனர் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரிப்பு செய்து உடனடியாக ஊர் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்க வேண்டும் என பலமுறை ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் கோரிக்கை புகார்மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர் மேலும் நம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மக்கள் பணி செய்வதற்காகவே மண்ணின் வேந்தர்களாக இரண்டு அமைச்சர்கள் இப்பகுதியில் இருந்தும் கிராம மக்களுக்கு குடிதண்ணீர் இல்லை என்பது மிகவும் மன வேதனையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாற்றுகின்றனர். குடிநீர் இல்லாமல் கண்ணீரோடு பள்ளிச் சிறுவர்கள் முதியோர்கள் கர்ப்பிணி பெண்கள் பள்ளி மாணவ மாணவியர்கள்யென அனைவரும் குடிதண்ணீருக்காக வெகுதூரம் செல்ல வேண்டிய ஒரு அவல நிலை ஏற்பட்டுஉள்ளதாக தெரியவருகிறது ஆகையால் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வரும் கூத்தாங்கல்பட்டிகிராம மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் நடவடிக்கையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து தார்மீக கடமையென ஏற்று உடனடியாக குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்களுக்கு குடிதண்ணீர் வழங்க வேண்டுமென ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.