ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் படி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது .
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் எழுந்தருளி அருளில் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் படி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது . தக்ஷிணாமூர்த்தி குருசாமி தலைமையில் நடைபெற்ற படி பூஜை விழாவில் ஐயப்ப பக்தர்கள் 108 சரணங்கள் சொல்லி பஜனை பாடல்கள் பாடி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் நள்ளிரவு 12 மணி அளவில் ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக ஐயப்பனுக்கு காண்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பூஜையில் சுற்றுவட்டார பகுதி ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் தக்ஷிணாமூர்த்தி குருசாமிக்கு ஆற்காடு ஜெய்மாருதி&கோ உரிமையாளர் ஜெய்மாருதி சரவணன் குரு காணிக்கையாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் நிறுவனர் ரவிச்சந்திரன், முப்பதுவெட்டி சீனிவாசன், வாசு, சாய்ராம் சீனிவாசன், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.