பிளாஸ்டிக் இல்லா உலகம் படைப்போம் என்ற உறுதி மொழியும் ஏற்கப்பட்டது

Loading

ராணிப்பேட்டையில் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஜே.சி.ஐ யின் கீழ் செயல்பட்டு வரும் ஜே.சி.ஐ. ராணிப்பேட்டை ஆஸ்ட்ராயடு இன் பதவி ஏற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்த ஆண்டின் முதல் புதிய தலைவராக ஜே. சி.ஐ. ரத்தினகுமாரி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  மண்டலம் பதினாரின் தலைவரான ஜே.சி.எச். ஜி.எப். ராஜேஷ் சுப்ரமணியம்,  டாக்டர். சமுத்திரளபாரதி, டாக்டர். பென்ஸ் பாண்டியன், கீதாசுந்தர்,   மண்டலகுழுவின் இணைதலைவர்கள் முன்னாள் தலைவர் ஜே.சி.எச். ஜி.எப். மைக்கேல் பிரபுதாஸ், குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மரக்கன்றுகள் வழங்குதல், பிளாஸ்டிக் இல்லா உலகம் படைப்போம் என்ற உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. இதில் முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
0Shares

Leave a Reply