பொல்லான் “பிறந்த தினம்! அமைச்சர்கள் பங்கேற்பு.
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் பிறந்த தினம் அரசு விழாவாக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைபடி ஈரோடு மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் 254-வது பிறந்தநாள் விழா மொடக்குறிச்சியில் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் வனத்து றை அமைச்சர் மதிவேந்தன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச். கிருஷ்ணனுண்ணி , கழக துணை பொதுசெயலாளர் , ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ஈரோடுபாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மற்றும், பொல்லான் பேரவை சேர்ந்தவர்களும் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் , துணை மேயர். செல்வராஜ், மற்றும் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேருர், கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.