குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா.

Loading

குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட  சிறப்பு முகாம் துவக்க விழா.அடுத்த காளியம்மன் பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நான்கு நல பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா கடந்த திங்கட்கிழமை  நடந்தது .இவ்விழாவிற்கு திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ. புருஷோத்தமன் தலைமை தாங்கினார். நல்லாசிரியர் விருது பெற்ற  நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தமிழ் திருமால் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக குடியாத்தம் ஒன்றி குழு தலைவர் என் .இ.சத்யானந்தம், கொண்ட சமுத்திரம் ஊராட்சி தலைவர் ஜி .பி.அகிலாண்டேஸ்வரி கலந்து கொண்டனர். விழா குத்துவிளக்கினை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜாத்தி, காளியம்மன் பட்டி தலைமை ஆசிரியை சுகந்தி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை  மகேஸ்வரி விழா குத்துவிளக்கினை ஏற்றிவைத்தனர். விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுடர்கொடி, சிவ கவி, புவனாதேவி, சரவணன், கமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தொடர்பு அலுவலர் இல. சீனிவாசன் திட்ட விளக்க உரை ஆற்றினார்.  கே. எம். ஜி. கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர்  மேகராஜ் ,திருவள்ளுவர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை  மலர்கொடி வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஆசிரியை  ஹேமலதா நன்றி கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *