நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற உறுப்பினர் பொன். ராஜசேகர் ஆற்காடு நகரில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்தீர்கள் சில நாட்களிலேயே அந்த கடை மீண்டும் திறக்கப்பட்டது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் பிளாஸ்டிக் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு ரூபாய். 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதற்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யமாட்டேன் என கடை உரிமையாளர் கடிதம் மூலம் எழுதிக் கொடுத்ததின் பேரில் மீண்டும் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. நகர மன்ற உறுப்பினர் உதயகுமார் என்னுடைய வார்டில் தெருக்களில் சேர்ந்துள்ள மண்ணை அகற்றும் பணி சென்ற கூட்டத்தில் தெரிவித்து இருந்தேன் இதுவரை அகற்றவில்லை அதிமுக உறுப்பினர் என்பதால் எந்த பணிகளும் செய்வதில்லையா? என கேள்வி எழுப்பினார்.நகர மன்ற தலைவர் அனைத்து உறுப்பினர்களையும் ஒரே மாதிரி நினைத்து தான் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள்? நகர மன்ற உறுப்பினர்கள் வாட்சப் குழுக்களில் தங்கள் வார்டு குறைகளை பதிவு செய்தால் ஏற்க முடியாது என்றும் முறைப்படி கடிதம் வாயிலாக மனு அளிக்க பட்டால் மட்டுமே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  நகர மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் கடந்த ஒரு வாரமாக என்னுடைய வார்டில் துப்புரவு பணிகள் நடைபெறவில்லை என்றும் காய்கனி மார்க்கெட்டில் கடையின் மேற்கூரை முறையாக சிமெண்ட் சீட்டு தான் போட வேண்டும் ஆனால் இரண்டு கடைகளுக்கு மட்டும் மேல் தளம் போடப்பட்டுள்ளது யார் அனுமதி அளித்தார்கள் என்று கேள்வி எழுப்பினார். நகர மன்ற உறுப்பினர் செல்வம் எனது வார்டில் புதியதாக குழாய் இணைப்பு வேண்டி மனு கொடுத்தும், டெபாசிட் தொகை செலுத்தியும், குடிநீர் குழாய் இணைப்பு தர தாமதமாகிறது உடனடியாக செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். நகர மன்ற உறுப்பினர் லோகேஷ் வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வைக்கின்றனர் குப்பை வண்டிகள் வராததால் அதை வீட்டிலேயே வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது இதற்கு நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். நகர மன்ற உறுப்பினர் கீதா சுந்தர் எனது வார்டில் சீரமைக்கப்பட்ட பூங்காவில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் நகர மன்ற உறுப்பினர் எனது பெயர் இல்லை அதில் நகர மன்ற உறுப்பினர் பெயரை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். நகர மன்ற உறுப்பினர் காமாட்சி கூறுகையில் ஆற்காடு பேருந்து நிலையம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகே செருப்பு தைக்கும் தொழிலாளி இரண்டு பேருக்கு மாற்று இடம் தந்து நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் அம்பேத்கர் சிலை சுற்றிலும்  சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவரை தடுக்க தடுப்பு வேலி  அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இறுதியில் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், நகர மன்ற துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன் ஆகியோர் நகர மன்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply