அழிந்து வரும் நீர் நிலைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Loading

சென்னை:  தோழர் நல்லகண்ணு நீர்நிலை பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேம்பாடு குறித்து எங்களையெ ல்லாம் ஆற்றுப்படுத்தி இருக்கிறார். அதுவே இயற்கை வள பாதிப்பு  குறி த்தான கட்டுரைகளை புத்தகங்களை எழுத தூண்டுகோலாக அமைந்தது. அழிந்து வருகின்ற நீர்நிலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆகவே தான் இது போன்ற இயற்கை வள பாதுகாப்பு போன்ற நூல்களை எழுத வேண்டியவனாக இருக்கிறேன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் பேசினார் .சி. மகேந்திரன் எழுதிய “பூவிரி புதுநீர் காவிரியாறு “என்னும் நூல் வெளியீ ட்டு விழா டிச. 26, முதுபெரும் தோழர் நல்லகண்ணுவின் 98 ஆவது அகவை தினத்தன்று, அவரது சென்னையிலு ள்ள  நந்தனம் தாமரை குடியிருப்பு இல்லத்தில் நடைபெற்றது .தோழர் நல்ல கண்ணு நூலை வெளி யிட ,திரைப்பட தயாரிப்பாளர் கலைப் புலி தாணூ நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரைத்து பேசினார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சபாநாயகர் முனு ஆதியின் மகனுமான தாம்பரம் ஆதிமாறன், டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன், பச்சை தமிழகம் யா. அருள், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தேசிய துணைத் தலைவர் எல்.அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரைத்து பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்ல கண்ணு  பேசும்போது, கட்சியின் 98 ஆம் ஆண்டு அமைப்பு  தினத்தில் இந்திய ஜனநாயகத்தின் இறையா ண்மையை , அதனை உறுதிப்படுத்தி உள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்திட வேண்டும் என நாம் எல்லோரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவின் இயற்கை வளங்களை அழிந்து படாமல் பாதுகாக்க வேண் டும் ; அதற்கு ஆதாரமான நதிகளை, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் நமது சங்க இலக்கியங்கள் முதற் கொண்டு அனைத்து இலக்கியங் களும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையையே வலியுறுத்து வதாக இருந்து வந்துள்ளது. அந்த இயற்கை வளங்களை நதிநீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வை உண்டாக்கிடும் “ஒரவண்ணத்துப்பூச்சியின் மரண சாச னம் ” ,  “பூவிரி புது நீர் காவிரியாறு” உள்ளிட்ட மகேந்திரனின் நூல்கள் காலத்தின் கட்டாயம் கருதி எழுதப் பட்டவையாக இருக்கிறது . அதனை அனைவரும் படித்து உணர வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கருத்துரைத்து வாழ்த்தி பேசினர் .98 ஆம் அகவை நாளில் தோழர் நல்ல கண்ணுவிற்கு பயனடை அணிவித் தும் சிறப்பு சேர்த்தனர். ஏற்புரை வழங்கிப் பேசிய நூலாசிரி யர் சி. மகேந்திரன் பேசியதாவது: தோழர் நல்லகண்ணு நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங் கள் மேம்பாடு குறித்து எங்களை யெல்லாம் ஆற்றப்படுத்தி இருக்கி றார். தாமிரபரணி நதி தீரத்து மணற் கொள்ளையை தடுக்க வேண்டி உயர் நீதிமன்றம் வரை சென்று தனி மனி தராக போராடி இருக்கிறார் .அதுவே இயற்கை வள பாதுகாப்பு குறித்த கட்டுரைகளை புத்தகங்களை எழுத தூண்டுகோலாக இருந்தது. அவ்வகை யிலேயே “ஒரு வண்ணத்து ப்பூச்சியின் மரண சாசனம் ” நூலை எழுதியிருந்தேன். இப்போது பொன் னி நதியின் பாதிப்பை உணர்த்தும் “பூ விரி புது நீர் காவிரியாறு ” நூலை எழுதி உள்ளேன் .அழிந்து வருகின்ற நீர்நிலை பற்றிய விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆகவே இந்த நூல்களை எழுதி உள் ளேன். காவிரி ஆறு உற்பத்தியாகி 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கலாம். கடந்த இராண்டாயிரம் ஆண்டுகளின் வரலாற்றை  பற்றிய கண்ணோட்டத் தில் எப்படியெல்லாம் அந்த பொன்னி யாறு  மாற்றத்திற்கு உள்ளாகி இருக் கிறது என்பதை அறிய வேண்டியுள் ளது . குடகு மலையில் இருந்து புறப்பட்டு வரும் அந்த நீரோட்ட போக்கு தடுப்ப ணைகளாக தடுக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்கு ஆட்படுத்தப்பட்டுள் ளது . கரிகால்வளவன் கல்லணையை ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு கட்டி தந்துள்ளான். ஆனாலும் கடந்த காலங் களின் பயன்பாடுகளை விட வெள்ள பாதிப்பால், கடலில் கலந்து வீணாகிப் போன நீரின் அளவு கூடுதலாக இருக் கும். தமிழகத்தின் மண்வளத்தை பாதுகா த்து வரும் தாமிரபரணி ,வைகை, பெண்ணை, பாலாறு உள்ளிட்ட ஆறு களை பற்றியும்,  முன்னொரு காலத் தில் நன்னீராக இருந்த கூவம் ஆறு பற்றியும் நூல்களாக எழுத திட்டமிட்டு இருக்கிறேன் என பேசினார். எதிர் பிம்பம் பதிப்பகத்தின் தாமரை செந்தில்குமார் நிகழ்ச்சியை  ஒருங்கி ணைத்திட்டார். பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *