கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கருப்பு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகை ஒட்டி கருப்பு கரும்பு கொள்முதல் செய்ய கால தாமதம் செய்து வரும் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
கருப்பு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ் செல்வம் ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன் நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்ஊத்தங்கரை ரவுண்டானாபகுதியிலஇருந்துசுமார்150க்குமமேற்பட்டவிவசாயிகள்கையிலகரும்புகளுடன்ஊர்வலமாகசென்றுஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆளும் திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 150 க்கு மேற்பட்ட கருப்பு கரும்பு விவசாயிகள் தமிழக அரசை நம்பி பொங்கலுக்காக சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் இந்த வருடம் (2022) கருப்பு கரும்பு பயிரிட்டுள்ளதாகவும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக அரசே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கம் மூலம் பொங்கலுக்கு விநியோகம் செய்து வந்தது.அதே போல கருப்பு கரும்புக்கு நிர்ணயத்தை விளையும் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உடனடியாக வந்து சேர்ந்தது.இந்த சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்நிலையில் தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து கருப்பு கரும்பு கொள்முதல் செய்ய முன்வராமலகாலம் தாழ்த்தி மௌனம் காத்துவருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்ற வேண்டி ஊத்தங்கரை நான்கு ரோடு சந்திப்பில் கருப்பு கரும்பு விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்புஆர்பாட்டமநடைபெற்றததொடர்ந்தஊத்தங்கரை நான்கு ரோடு சந்திப்பிலிருந்து விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்கொண்கோஷங்களைஎழுப்பியவாறுநடைபயணமாக சென்று ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து அலுவலகத்தில் வட்டாட்சியர் இல்லாத காரணத்தினால் துணை வட்டாட்சியரிடம் கருப்பு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கருப்பு கரும்புகளை உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி மனு அளித்தனர்.