அரசு பள்ளியில் தேசிய கணித நாள் விழா

Loading

திருவள்ளுவர் மாவட்டம் ஆலப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித மேதை ராமானுஜம் 135 வது பிறந்தநாள் முன்னிட்டு கடந்த 22ஆம் தேதி தேசிய கணித நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை பாகீரதி தலைமை தாங்கினார். கணித ஆசிரியர் கண்மணி வரவேற்று பேசினார். இதில் கணித மேதை குறித்து ஆசிரியர்கள் இளவரசன், வெங்கடேசன், அரசி, சீபா ஆகியோர் பேசினர் முன்னதாக பள்ளியில் நடைபெற்ற கணித கண்காட்சி உள்ளிட்ட பல்வகை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் விழா ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தங்கராஜ் எழிலரசி உள்ளிட்டோர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply