குடிபோதையில் தகராறு செய்தவர் 3 பேர் கைது.

Loading

திருவள்ளூர் டிச 27 : திருவள்ளூர் அடுத்த  மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  ஒண்டிக்குப்பம் , கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மெக்கானிக்கடை நடத்தி வருபவர் ஜானகிராமன் மகன் கோகுல்ராஜ். (24). இவர் நேற்று முன்தினம் மாலை மணவாநகரில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள ஸ்போர்ட்ஸ் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது கடை வாசலில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர  வாகனத்தை எடுக்கும் போது, பிரவீன் (23)நவீன் (22) மற்றும் முகேஷ் (18) ஆகிய  3 பேரும் கடை அருகே ஓடி வந்துள்ளனர்.  அப்போது பிரவீன் என்பவர் அசிங்கமாக பேசிக் கொண்டே வந்துள்ளனர்.  அப்போது ஏன் அசிங்கமாக பேசுகிறீர்கள் என கோகுல்ராஜ் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள்.. எங்களை யாருன்னு தெரியாதா ,, நாங்க இந்த ஏரியாவுல பெரிய ரவுடிங்க … எங்களைப் பார்த்தால் பயம் வரணும் என கூறிகையில்வைத்திருந்தகையால்கோகுல்ராஜைவெட்டியுள்ளனர்.அதனையடுத்து சீனு மற்றும் முகேஷ் ஆகிய  இருவரும் கையில் வைத்திருந்த கட்டையால் தாக்கியுள்ளனர். மேலும் 3 பேரும் சேர்ந்து கத்தி மற்றும் கட்டைகளை காட்டி இதோடு ஒழித்துவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுததுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கோகுல்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   இது குறித்து கோகுல்ராஜ், மணவாளநகர் காவல் நிலையத்தில்கொடுத்த புகாரின் பேரில் பிரவீன் (23)நவீன் (22) மற்றும் முகேஷ் (18) ஆகிய  3 பேரையும்‌ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *